2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

இரணைமடுக்குளத்தின் 11 வான்கதவுகளும் திறப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுக்குளத்தின் பதினொரு வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.  இரணைமடுக்குளத்தில் நீர் நிரம்பியுள்ள நிலையில், நீர் மட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீர்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வான்கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து, குளத்திலிருந்து வெளியேறும் நீர் பரந்தன்  முல்லைத்தீவு வீதியை மூடிப் பாய்கிறது.

இதேவேளை, கிளிநொச்சி வட்டக்கச்சிக்கான பாதையிலிருக்கும் பன்னக்கண்டிப்பாலத்தில் நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் இப் பாதையூடாக போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் அவதானத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளம் அதிகமாகவுள்ள இடங்களில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--