2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

பாடசாலைகள் மறுசீரமைப்பு திட்டத்துக்கு கிளிநொச்சியில் இருந்து 11 பாடசாலைகள் தெரிவு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 10 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

நாடு முழுவதும் ஆயிரம் பாடசாலைகளை மறுசீரமைப்புச் செய்யும் ஜனாதிபதியின் விசேட திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் பதினொரு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இன்று காலை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற இது தொடர்பான விசேட கூட்டத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கல்வி வலயத்திலுள்ள கரைச்சிக் கோட்டத்தில் ஐந்து பாடசாலைகளும் கண்டாவளைக் கோட்டத்தில் இரண்டு பாடசாலைகளும் பளைக் கோட்டத்தில் ஒரு பாடசாலையும் பபூநகரிக் கோட்டத்தில் மூன்று பாடசாலைகளுமாக மொத்தம் பதினொரு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி கரைச்சிக் கோட்டத்தில் கிளிநொச்சி இந்துக்கல்லூரிஇ மத்திய கல்லூரிஇ பாரதி வி்த்தியாலயம்இ அக்கராயன் மகா வி்த்தியாலயம்இ வட்டக்கச்சி மகா வித்தியாலயம் ஆகியன தெரிவு செய்யப்பட்டுள்ளன.  கண்டாவளைக் கோட்டத்தில் தருமபுரம் மகா வித்தியாலயம்இ முரசுமோட்டை மகா வித்தியாலயம் ஆகியன தெரிவாகியுள்ளன.

பளைக் கோட்டத்தில் பளை மத்திய கல்லூரியும் பூநகரிக் கோட்டத்தில் வேரவில் இந்து மகா வித்தியாலயம்இ முழங்காவில் மகா வித்தியாலயம் பூநகரி மகா வி்த்தியாலயம் ஆகிய பாடசாலைகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டுமல்ல வன்னியிலுள்ள ஒரேயொரு பெண்கள் பாடசாலையான புனித தெரேசா பெண்கள் கல்லூரி இந்தச் சிறப்புத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--