2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

130 குடும்பங்களுக்கு உலர் உணவுகள்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 30 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்டத்தில் பார்வையற்ற அங்கத்தவர்களைக் கொண்ட நலிவடைந்த 130 குடும்பங்களுக்கு சுவிஸ் நாட்டிலுள்ள புலம்பெயர் அமைப்பான எழுகை அமைப்பினால் உலர் உணவுப் பொருட்கள் சனிக்கிழமை (29) வழங்கப்பட்டன.

ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கிளிநொச்சியின் பரந்தன் பகுதியிலுள்ள வன்னி பார்வையற்றோர் சங்க அலுவலகத்தில் அச்சங்கத் தலைவர் எஸ்.ரூபராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பயனாளிகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகதராதலிங்கம் உலர் உணவுப் பொருட்களை வழங்கிவைத்தார்.

வன்னிப் பகுதியில் பார்வையற்ற அங்கத்தவர்களைக் கொண்ட நலிவடைந்த  குடும்பங்களைத் தெரிவு செய்து சுழற்சி முறையில்  உலர் உணவுப் பொருட்கள் மாதாந்தம் எழுகை அமைப்பு வழங்கிவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .