2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

135 இலட்சம் ரூபாய் செலவில் இராணுவ கேட்போர் கூடம்

Super User   / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ரி.விவேகராசா)

பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில்  135 இலட்சம் ரூபாய் செலவில் வன்னி இராணுவ தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இராணுவத்தினருக்குரிய கேட்போர் கூடத்தை இராணுவ தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இன்று சனிக்கிழமை காலை  திறந்துவைத்தார்.

இங்கு உரையாற்றிய இராணுவ தளபதி, யுத்தத்தினால் உயிர் நீர்த்த இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு நீண்ட கால கடன் திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அதன் ஊடாக அவர்கள் பொருளாதாரத்தில் உயர்வடை முடியும்.

மேலும் அங்கவீனமடைந்த படையினரை பராமரிக்க அனுராதபுரத்தில் விடுதி அமைக்க திர்மானித்துள்ளோம். இவ்விடுதியில் சுமார் 230 பேர் சகல வசதிகளுடன் பராமரிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.


 


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .