2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

சுழல் காற்றினால் 15 இற்கும் அதிகமான வீடுகள் சேதம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தின் நெளுக்குளம், நான்காம் கட்டை, கற்பகபுரம், அரபாநகர், கிச்சிராபுரம் ஆகிய பகுதிகளில் வீசிய சுழல் காற்றினால் 15 இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக செக்கடிப்பிளவு கிராம அலுவலகர் கே.கனகவேல்ராஜன் தெரிவித்தார். 

அத்துடன், வெதுப்பகமொன்றும்  100 அடி நீளமுடைய கோழி வளர்ப்பு கொட்டகையொன்றும் முற்றாகச்  சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த பகுதிகளில் புதன்கிழமை (16) மாலை சுழல் காற்றுடன் கூடிய மழை பெய்தது. மாலை 5.30 மணியிலிருந்து 07 மணிவரை சுழல் காற்றுடன் கூடிய மழை நீடித்ததாகவும் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வீடுகளினுள் மழை நீர் புகுந்ததுடன்,  மின் விநியோகம் தடைப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X