2025 ஜூலை 10, வியாழக்கிழமை

15 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற நால்வர் கைது

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் பஸ் நிலயத்தில் பஸ்ஸுக்காக கத்திருந்த 15 வயதுடைய சிறுமியை, பலவந்தமான முறையில் அருகிலுள்ள மலசலகூடத்துக்கு இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று மாலை 4.30 மணியளவில் பஸ்ஸிற்காக காத்திருந்த குறித்த சிறுமியை 3 இளைஞர்கள் பலவந்தமாக, அருகாமையிலுள்ள பொது மலசலகூடத்துக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளதுடன் அச்சிறுமியை கையடக்க தொலைபேசி மூலம் படம் பிடிக்கவும் முயன்றுள்ளனர்.

அப்போது குறித்த சிறுமி சத்தமிட்டதை அடுத்து அப்பகுதியில் கடமையிலிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்க, பொலிஸாரும் அவ்விடத்துக்கு விரைந்து சிறுமியை காப்பாற்றியுள்ளனர்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையதான மூன்று இளைஞர்களையும் கைது செய்துள்ள பொலிஸார் சமபவத்துக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றுமொரு இளைஞரையும் சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து கைது செய்துள்ளனர்.

மேற்படி சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நான்கு இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த பொலிஸார், அவர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • edward Monday, 30 August 2010 02:23 PM

    முதலில் நடு சந்தியில வைச்சு பச்ச மட்ட அடி கொடுக்கவேணும் இவர்களுக்கு.

    Reply : 0       0

    chris Monday, 30 August 2010 06:43 PM

    ஏன் அந்த அளவுக்கு மோசமான நிலைமை அங்கு?

    Reply : 0       0

    xlntgson Monday, 30 August 2010 09:03 PM

    அட படு பாவிகளா! காமம் தலைக்கு ஏறி இருக்கும் விதத்தை பார்த்தால் பாதகர்களை கட்டாயப்படுத்துதலுக்கு காயடிக்கும் சட்டம் கண்டிப்பாக இந்த நாட்டுக்கு அவசியம் என்று தெரிகிறது. ஒற்றுமை இந்த மாதிரி விடயங்களுக்கு எப்படி ஏற்படுகிறது? உருப்படியான வேலைகளுக்கு 2 பேர் ஒற்றுமையாக செயல்படுகின்றவர்களை காண முடிவதில்லை. உதவிக்கு ஒருவரும் இல்லாமல் இந்தக்காலத்தில் கைவேலைக்கு ஆள் கிடைக்க கஷ்டம் என்கிறார்கள் ஒத்துழைப்பு இல்லை என்றும் களவு எடுக்கின்றனர் என்றும் ஒருவரையும் நம்ப முடியவில்லை என்றும் தனியே கஷ்டப்படுகின்றனர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .