2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் 17ஆவது ஆண்டு நிறைவு

Super User   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஞானசெந்தூரன்)

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் 17ஆவது ஆண்டு நிறைவுவிழா எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

கல்லூரியின் பீடாதிபதி கே.பேர்னாட் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கல்வி மற்றும் துறைசார்ந்த 8 பேர் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.

கலாநிதி எஸ்.எஸ்.சிவகுமார் (பொறியியலாளர்), பேராசிரியர் சோ.சந்திரசேகரன் (கொழும்பு பல்கலைக்கழகம்), பேராசிரியர் மா.கருணாநிதி (கொழும்பு பல்கலைக்கழகம்), கலாநிதி க.ஸ்ரீகணேஸ் (யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம்), கலாநிதி அ.புஸ்பநாதன் (யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம்), கலாநிதி திருமதி அ.ஆனந்தி (யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம்), கலாநிதி ந.இரவீந்திரன் (தர்க்காநகர் தேசிய கல்வியற் கல்லூரி), கலாநிதி செல்வி தி.நல்லையா (யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி) ஆகியோரே இவ்வாறு கௌரவிக்கப்படவுள்ளனர்.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி 1993ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி செயற்படத் தொடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .