2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

1950இல் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களுடன் இயங்கும் பாடசாலைகள்

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

கிளிநொச்சி மேற்குப் பாடசாலைகள் பல, 1950ஆம் ஆண்டுடளவில் நிர்மாணிக்கப்பட்ட பழைய கட்டடங்களுடன், தற்போதும் இயங்கி வருவதாக, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள 112 பாடசாலைகளில், தற்போது 104 பாடசாலைகள் இயங்குகின்றன.

கிளிநொச்சி மேற்கு பகுதியில் உள்ள ஓரிரு பாடசாலைகளைத் தவிர, பல பாடசாலைகள் 1950ஆம் ஆண்டளவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களுடனேயே இயங்கின்றன.

2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், கிளிநொச்சி கிழக்குப் பாடசாலைகளுக்கு பல புதிய கட்டடங்கள் கிடைக்கப் பெற்றபோதிலும், கிளிநொச்சி மேற்குப் பாடசாலைகளுக்குப் புதிய கட்டடங்கள் கிடைக்கவில்லை.

இயங்குகின்ற 104 பாடசாலைகளும், ஒரே மாதிரியாகப் பார்க்காமல், பாரபட்சமான முறையில் வளங்கள் பங்கிடப்பட்டுள்ளமை, வலயக் கல்விப் பணிமனை மேற்கொண்டுள்ள ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி வலயத்தில், 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மூடப்பட்ட 8 பாடசாலைகள், தற்போதும் அந்நிலையிலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .