Menaka Mookandi / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இரு சந்தேகநபர்கள் பொலிஸ் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்ற சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
மன்னாரிலிருந்து வவுனியா விளக்கமறியல்சாலைக்கு பஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட இவ்விரு கைதிகளும் நேற்று இரவு 9 மணியளவில் வவுனியா சிறைச்சாலைக்கு அருகில் வைத்து தப்பிச் சென்றதாகவும் அவர்களைத் தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் வவுனியா சிறைச்சாலை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பூந்தோட்டத்தைச் சேர்ந்த அழகையா கௌரிராசா, கற்குளம் சிதம்பரபுரத்தைச் சேர்ந்த இராஜேந்திரன் ரவிக்குமார் ஆகிய இரண்டு கைதிகளுமே கைவிலங்கை கழற்றிக்கொண்டு தப்பியோடியவர்கள் என சிறைச்சாலை அதிகாரி கூறினார்.
இவர்களை கண்டுபிடிப்பதற்காக நேற்றிரவு வவுனியா நகரம் முழுவதும் பொலிஸார் தீவிரதேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டார்கள். சாதாரண சிவில் உடையில் இவர்கள் தப்பியோடியதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
15 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago