2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

20 வருடங்களின் பின் நாகதாழ்வு மீள்குடியேற்றம்

Super User   / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (எஸ்.ஜெனி)

மாந்தை நாகதாழ்வு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் 20 வருடங்களின் பின்னர் மீண்டும் சொந்த இடங்களுக்கு இன்று வியாழக்கிழமை மீளக்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

மன்னார் நகர பகுதியில் உள்ள உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வந்த 44 குடும்பங்களே மீளக்குடியமர்த்தப்பட்டதாக மன்னார் பிரதேச செயலாளர் ஸ்ராலி டி மெல் தெரிவித்தார்.

மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை இராணுவம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை 52 குடும்பங்கள் மாந்தை எலுப்பிட்டி கிராமத்தில் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--