2021 ஜனவரி 27, புதன்கிழமை

சீரற்ற காலநிலையால் மன்னாரில் 20,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 28 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணத்தினால் இதுவரை 5107 குடும்பங்களைச் சேர்ந்த 20250 பேர் பாதீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.

இவர்களில் 2049 குடும்பங்களைச் சேர்ந்த 7023 பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில் 38 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 25 குடும்பங்களைச் சேர்ந்த 711பேர் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம்பகுதியில் நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.

முசலியில் 2805 குடும்பங்களைச் சேர்ந்த 12516 பேர் பாதீப்படைந்த நிலையில் உள்ளனர். மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணத்தினால் குஞ்சுக்குளம் துருசின் நீர்மட்ட அளவு 18 அடி 10 அங்குமாக உயர்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதேசமயம் மன்னார் கமநல திணைக்களத்திற்கு சொந்தமான 27 சிறு குளங்களும் உடைப்பெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்களுக்கான அவசர தேவைகளை குறித்த கிராமங்களுக்கு பொறுப்பான பிரதேச செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றார்.

இதேவேளை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாகுதிகளில் பாதீக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் றிஸாட் பத{யுதின் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைககப்பட்டுள்ளது.

தாழ்வுபாட்டு கடற்கரையில் இருந்து தாழ்வுபாட்டு கடற்படை அதிகாரி லெப்டினன் கொமான்டர் சேனா நயக்க அவர்களின் தலைமையில் உலர் உணவுகள் மற்றும் மருந்து பொருட்கள் என்பன அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .