2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஓமந்தையில் மனித மண்டையோடு, எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்குளம் காட்டுப் பகுதியிலிருந்து மனித மண்டையோடுகளும் எலும்புக்கூடுகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினராலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவற்றுடன், சீருடைகளும் சயினைட்டு குப்பிகள் சிலவும் அப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இதனையடுத்து அங்கு சென்ற மாவட்ட நீதிவான் எம்.கணேசராசா, கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டார். இந்நிலையில் மேற்படி, எழும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக கொழும்புக்கு  அனுப்பிவைக்கப்பட்டன.
 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .