2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

செம்மொழி விழாவையொட்டி கவிதை, சிறுகதைப் போட்டி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படும் தமிழ்ச் செம்மொழி விழாவையொட்டி கவிதை மற்றும் சிறுகதைப் போட்டிகள் இடம்பெறவுள்ளது.

முதலாம் இடத்திற்கு 5000 ரூபாவும் இரண்டாம் இடத்திற்கு 3000 ரூபாவும் மூன்றாம் இடத்திற்கு 2000 ரூபாவும் ஏனைய 9 படைப்புக்களுக்கும் பரிசுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

கவிதை அல்லது சிறுகதையானது ஈழத்தமிழரின் அவலங்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். எங்கும் பிரசுரிக்கப்படாததாக இருத்தல் வேண்டும். தலைப்பினை போட்டியாளர்களே தீர்மானிக்க வேண்டும். இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் இப்போட்டியில் பங்குபற்ற முடியும். போட்டி முடிவுத் திகதி செப்டெம்பர் 3 ஆம் திகதியாகும். அனுப்ப வேண்டிய முகவரி வி.எஸ்.சிவகரன், பொதுச்செயலாளர், புனித வளனார் மாணவர் இல்லம், இல. 130 வைத்தியசாலை, மன்னார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--