2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் கடற்கரையில் ஒதுங்கிய சடலம் அநுராதபுரத்திற்கு அனுப்பப்பட்டது

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியில் கடந்த புதன்கிழமை கரை ஒதுங்கி மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் மேலதிக பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேற்படி மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்ட சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.

இந்நிலையில், சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு அனுப்புமாறு மன்னார் நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய சடலம் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--