Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கும் சங்கத்ததில் பதிவு இல்லாத முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கும் இடையே பயணிகளை ஏற்றி இறக்குவதிடையே தொடர்ந்தும் முரண்பாடுகள் ஏற்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.
முச்சக்கர வண்டிச் சங்கத்தில் சுமார் 250 இற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் பதிவில் இருந்து தங்களின் ஒழுங்கு முறைப்படி சேவைகளை மேற்கொணடு வருகினறனர்.
எனினும், தங்களின் சங்கத்தில் பதிவு செய்யாமல் சுமார் 10 இற்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தில் பதிவுசெய்யப்படாது தங்களின் விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றி இறக்குவதாகவும் சங்க உறுப்பினர்கள தெரிவிக்கின்றனர்.
இவ்விடயத்தில் தங்கள் சங்கத் தலைவர் மௌனம் காட்டி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இவ்விடயம் குறித்து மேற்படி சங்கத்தலைவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது விரைவில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025