2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

வன்னி, யாழ் ஆசிரியர்கள் இடமாற்றம் ரத்து

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி-விவேகராசா)

வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 367 ஆசிரியர்களுடைய இடமாற்றங்களும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல்  ஜி.ஏ.சந்திரசிறி  அறிவித்துள்ளார்.

இடமாற்றங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், வருடாந்த இடமாற்ற கொள்கைக்கு அமைய மாவட்ட இடமாற்றசபை மூலம் நடைமுறைப்படுத்தவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

வவுனியாவில் நேற்று திங்கட்கிழமை ஆளுநர் தலைமையில் கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற உயர்மட்ட மகாநாட்டில் இடமாற்றங்கள் குறித்து  ஆராயப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

367 ஆசிரியர்களுக்கும் மாகாண கல்விப் பணிப்பாளரினால் இடமாற்ற கடிதங்கள்  அனுப்பிவைக்கப்பட்டு மூன்றாம் தவணை ஆரம்பிக்கும்போது கடமையை பொறுப்பேற்குமாறு கோரப்பட்டிருந்தனர். இதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் இதற்கு பலத்த எதிர்ப்பினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--