Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா )
வவுனியா நகர சபை தொழில்நுட்ப அலுவலர் ஒருவர் இன்று தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்யமுயற்சித்துள்ளார். தாடையில் பலத்த துப்பாக்கி சூட்டு காயத்துடன் வவுனியா வைத்தியசாலைக்கு இன்று செவ்வாய்ல்லிழமை 12 மணியளவில் கொண்டுவரப்பட்டு மேலதிக சிகிச்சையின் பொருட்டு அனுராதபுரம் பொதுவைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
வவுனியா அம்பலாங்கொடல பகுதியில் வசித்துவரும் வவுனியா நகரசபை அலுவலகத்தின் தொழில் நுட்ப அலுவலருமான 45 வயது கிரிசாந்த என்பவரே இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்.
வவுனியாவில் வசிக்கும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தற்பாதுகாப்பின் நிமித்தம் துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த துப்பாக்கியினாலேயே தனக்கு தானே வீட்டில் வைத்து சுட்டுள்ளார் என்பது ஆரம்ப கட்ட
விசாரணையின்போது தெரியவருகின்றது.சமாதான நிலை தோன்றியபோதும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் இன்னமும்
மீளப்பெறப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago