Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா மாவட்டத்தில் அண்மையில் மக்கள் குடியேறிய சேமமடு, பாலமோட்டை கிராமங்களில் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவைகள் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 2ஆம் திகதி வியாழக்கிழமை சேமமடு மகா வித்தியாலயத்திலும் மறுநாள் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாலமோட்டை அரசினர் பாடசாலையிலும் நடமாடும் சேவைகள் இடம்பெறும் என மாவட்ட அரச அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார்.
பிரதேச செயலாளர், இறப்பு மற்றும் பிறப்பு பதிவாளர், கல்வி, வீடமைப்பு, சுகாதாரம், நீர்பாசனம், வீதி அபிவிருத்தி உள்ளிட புனரமைப்புடன் தொடர்புடைய சகல சிரேஷ்ட உயர் அதிகாரிகளும் நடமாடும் சேவையின் போது கலந்து கொள்ளவுள்ளார்கள்.
மீள்குடியேறிய மக்களுடைய நலன்கருதியே இந்த நடமாடும் சேவை நடத்த தீர்மானிக்கப்பட்டது எனவும் அரச அதிபர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
02 Jul 2025