2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

நிரந்தர ஆசிரியர் நியமனம் கிடைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி-விவேகராசா)

வடமாகாணத்தில் நீண்டகாலமாகத் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி நிரந்தர நியமனம் கிடைக்காதவர்களின் பெயர்ப்பட்டியல் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி துணுக்காய் வலய தொண்டர் ஆசிரியர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்த நிலையிலும் எதுவித கொடுப்பனவுகளும் இன்றி சேவையாற்றி வரும் எமக்கு நிரந்த நியமனம் வழங்கப்பட வேண்டும்  என்ற கோரிக்கை உள்ளிட்ட ஆறு விடயங்கள் அடங்கிய மனு தொண்டர் ஆசிரியர்களினால் கடந்த புதன்கிழமை யோகபுரம் மகாவித்தியாலத்தில் வைத்து ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. இந்த வைபவத்தில் துணுக்காய் வலய கல்விப்பணிப்பாளர் கே -மேகநாதனும் சமூகமளித்திருந்தார்.

முல்லைத்தீவு கிளிநொச்சி தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பணிபுரிந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை பற்றியும்  மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--