Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட சாலம்பன் பகுதியில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் முதற்கட்டமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாய பூர்வமாக அடிக்கல் நாட்டும் நிகழ்வு மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது.
இடம்பெயர்ந்த நிலையில் வீடுகளை இழந்த 55 குடும்பங்களுக்கு இவ்வாறு வீடுகள் அமைத்துக் கொடுப்படவுள்ளன.
குடும்ப உதவித் திட்டம் எனும் கருப்பொருளிலான சமூக அமைப்பு செயற்றிட்டத்தின் ஊடாக முதல் தடவையாக சாலம்பன் கிராமத்தில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு இவ் நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வின்போது மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் செயலாளர், மன்னார் குருமுதல்வர் அன்டனி விக்டர் சூசை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025