2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு மண் ஏற்றிச் செல்லத் தடை

Super User   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மண் ஏற்றிச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றமையால் இங்கு பெரும் அளவில் மண்தேவையாக உள்ளது. இந்நிலையில் வெளிமாவட்டங்களுக்கும் மணல் ஏற்றும் பட்சத்தில் சுற்றுச்சூழல் பாதிப்படையும் நிலைமை தோன்றும். எனவே, இதனைக் கருத்தில் கொண்டு வெளி மாவட்டங்களுக்கு மணல் ஏற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான மணலைப் பெறவிரும்புபவர்கள் புவிச்சரிதவியல் திணைக்களம், சுற்றாடல் அதிகாரசபை ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு அனுமதியைப் பெறவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .