Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 28 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னாரில் நேற்று திங்கட்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்த போது மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்ததுடன் வீடு ஒன்றும் இடி தாக்கத்தால் சேதமடைந்துள்ளது.
இதேவேளை, மன்னார், எழுத்தூர், பெரியகாமம் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்று மாலை இடி விழுந்துள்ளது. இதன்போது கல் வீட்டில் எவரும் இருக்கவில்லை. வீட்டின் கூரைப்பகுதி ஓலையினால் அமைக்கப்பட்டுள்ளதால் வீடு முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.
தலைமன்னார் பகுதியில் அன்ரனி பெர்னாண்டோ (வயது 41) என்பவரே இதன்போது உயிரிழந்தவராவார். மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இவரது சடலத்தை பார்வையிட்ட மன்னார் நீதிவான் நீதிமன்ற கே.ஜீவராணி, பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
15 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
6 hours ago