2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

கிளிநொச்சி வைத்திய அதிகாரி பணிமனைகள் அடிப்படைச் சிகிச்சைகள் வழங்கமுடியாத நிலையில்

Super User   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வைத்திய அதிகாரி பணிமனைகளில் கற்பிணித் தாய்மாருக்கான சிகிச்சைகளை மேற்கொள்வதற்குரிய அடிப்படை வசதிகள் இல்லாமையால் பெரும் நெருக்கடி நிலைமை காணப்படுவதாக யாழ். மாவட்ட தாய், சேய் நல வைத்திய அதிகாரியும் தொற்றுநோய் தடுப்புப்பிரிவுப் பொறுப்பதிகாரியுமான டாக்டர் சிவசங்கர் திருமகள் தெரிவித்துள்ளார்.

கற்பிணிகளுக்கான செயலமர்வு ஒன்றை கிளிநொச்சியில் கடந்த வாரம் 3 தினங்கள் டாக்டர் சிவசங்கர் திருமகள்  நடத்தினார். இதன்போதே இந்நிலைமைகளைத் தான் உணர்ந்து கொள்ள முடிந்தது என்று அவர் தெரிவித்தார்.

தாய், சேய் நல வைத்திய அதிகாரி, தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி எவருமே அற்ற நிலையில் இங்குள்ள வைத்திய அதிகாரி பணிமனைகள் உள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாதாந்தம் 200 குழந்தைகள் பிறக்கும் நிலையில் இவ்வாறான நிலைமை காணப்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

கண்டாவளை, பளை, பூநகரி, கிளிநொச்சி ஆகிய வைத்திய அதிகாரி பணிமனைகளே இந்நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--