Super User / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கட்டடங்களை விடுவிக்குமாறு பாடசாலை அதிபர் ஆ.ஆலாலசுந்தரம் கிளிநொச்சி படை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி படை அதிகாரிகளான மேஜர் ஜெயரட்ணா, மேஜர் தென்னக்கோன் ஆகியோரிடம் இக்கோரிக்கையை விடுத்ததாகவும் விரைவில் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர்கள் தெரிவித்ததாகவும் அதிபர் தெரிவித்தார்.
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உள்ள இரண்டு கட்டடங்களில் மீள்குடியேற்றத்துக்கு அழைக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்பாடசாலை தற்போது தற்காலிக கொட்டகைகளிலேயே இயங்கி வருகின்றது. தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் மாணவர்கள் இதனால் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வர் என்று பாடசாலை அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பாடசாலையில் கூரை சேதமடைந்த நிலையில் உள்ள கட்டடங்களைப் புனரமைக்க மக்கள் வங்கி முன்வந்துள்ளதாகவும் இதற்கு 20 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
7 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago