Super User / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜித்தன்)
முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் மேற்கொள்வதற்குரிய உபகரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு 591 ஆவது படைப்பிரிவினர் இவற்றை வழங்குவதற்கு பயனாளிகள் தெரிவுசெய்யும் முகமாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர், செயலாளர் மற்றும் பிரதிநிதிகளை நேற்று அவர்களது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு 20 குல்லாப் படகுகளும் 15 வெளியிணைப்பு இயந்திரப் படகுகளும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வழங்கவுள்ளதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டது.
இதில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
24 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
2 hours ago