2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்தில் முன்பள்ளிகள் ஒன்றியம்

Super User   / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒன்றியம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் ஏற்பாட்டில் இந்த ஒன்றியம் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. 300 இற்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஊதியம் இன்றி முன்பள்ளிகளில் சேவையாற்றும் ஆசிரியர்கள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடனேயே இந்த ஒன்றியம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .