2020 நவம்பர் 28, சனிக்கிழமை

வவுனியா குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத செயலல்ல: பாதுகாப்பு பிரிவு

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் வவுனியா மில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனத்தின் முன்பகுதி வெடித்து சேதமான விவகாரம் தொடர்பாக வாகன உரிமையாளர் பொலிஸாரின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை இரசாயன பகுப்பாய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை நடத்தினார்கள்.

குண்டு வெடிப்பு அதிர்வினால் ஏற்பட்ட சேதம்போல் வாகனத்தின் முன்பகுதி சிதைந்து காணப்படுகின்றது என பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். இவ்வெடிப்பு சம்பவமானது மர்மமானதாகவே காணப்படுவதாகவும் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின்போது அருகாமையில் நின்றுகொண்டிருந்த வர்த்தகர்களான எஸ்.செல்வராசா, ஏ.தம்பிராசா ஆகியோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் வவுனியா அரசினர் பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிப்பு சம்பவத்தில் சேதத்திற்குள்ளான பெறுமதிவாய்ந்த சொகுசுவாகனம் தற்போது பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு மேல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

'சொகுசு வாகனம் குண்டு தாக்குதலுக்கு உள்ளானது என்பதினை பாதுகாப்பு தரப்பினர் மறுக்கவில்லை. வவுனியா வர்த்தர்கள் மத்தியில் சிலகாலம் நிலவிவரும் தினசீட்டு விவகார கொடுக்கல் - வாங்கல் தொடர்பாகவே குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது நிச்சயமாக பயங்கரவாத சம்பவம் அல்ல...' எனவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--