2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

இடம்பெயர்ந்தோர் சேவை நாளை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உள்நாட்டில்  இடம்பெயர்ந்தோர் செயற்றிட்டத்தினால் நடத்தப்படும் வவுனியா, ஆசிக்குளம் கிராமசேவகர் பிரிவிலுள்ள கல்நாட்டினகுளம், மதுராநகர், சிதம்பரபுரப் பிரிவு மக்களுக்கான விசேட நடமாடும் சேவை  நாளை சனிக்கிழமை கல்நாட்டினகுளம் கிராம அபிவிருத்தி சங்கக் கட்டடத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கை; மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியாவிலுள்ள உள்நாட்டு இடம்பெயர்ந்தோர் செயற்றிட்டம் தெரிவித்தது.  

நாளை சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த விசேட நடமாடும் சேவையில், சட்ட ஆவணங்களான பிறப்புச் சான்றிதழ்இ இறப்பு சான்றிதழ், திருமணப் பதிவுச் சான்றிதழ்இ தேசிய அடையாள அட்டைப் பதிவு,  காலங்கடந்த பதிவு ஆகியவற்றை வழங்குவதற்கான பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தவிர, பாடசாலை மாணவர்களுக்கான விசேட ஏற்;பாடுகள், நிவாரணம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணல், இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சிகள், விதவைகள் மற்றும் விசேட தேவைகளுக்குட்பட்டவர்களுக்குரிய தேவைகளும், ஏற்;பாடுகளும், இலவச சட்ட ஆலோசனைகள், காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணல் ஆகியனவும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--