2020 நவம்பர் 28, சனிக்கிழமை

அமைச்சர் டக்ளஸ் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களுக்கு விஜயம்

Super User   / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு மூன்று நாள் விஜயமொன்றை நாளை ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறிய இடங்களுக்கு விஜயம் செய்வதோடு அவர்களுடைய தேவைகள் குறித்து அமைச்சர் நேரில் ஆராயவுள்ளார்.

31ஆம் திகதி மன்னாருக்கும் 1ஆம் திகதி முல்லைத்தீவுக்கும் 2ஆம் திகதி வவுனியாவிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்வார். இதன் போது பொது மக்களுடனான பல சந்திப்புக்களிலும் அமைச்சர் கலந்து கொள்வார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--