2020 நவம்பர் 25, புதன்கிழமை

பளை பச்சிலைப்பள்ளிப் பிரதேச அபிவிருத்தி மாநாடு

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த)

பளை பச்சிலைப்பள்ளிப் பகுதிப் பிரதேசத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அப்பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்த மாநாடு எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு புலோப்பளை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, வடமாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர், இராணுவ அதிகாரிகள் மற்றும் பச்சிலைப்பள்ளிப் பிரதேச பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த மாநாட்டின் போது பச்சிலைப் பள்ளிப் பிரதேச செயலர் பிரிவில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த மக்களின் பிரச்சினைகள், தென்னைப் பயிர்ச்செய்கை தொடர்பான விடயங்கள், பிரதேச மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள், பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள், பாதிக்கப்பட்டோருக்கான உதவித்திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டவுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--