2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஒமந்தை பகுதியில் கப்பம் வசூலித்த இருவர் கைது

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பொருட்களை ஏற்றி செல்லும் லொறிகளில் ஒமந்தைக்கு அருகாமையில் வைத்து தலா ஐயாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரையில் கப்பம் பெற்று வந்த இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள்  தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் என  தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கப்பம் வசூல் நீண்டகாலமாக நடைபெற்று வந்துள்ளமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .