2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

வடக்கு வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வாகனங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 09 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)
 
வன்னி மற்றும் யாழ்ப்பாண அரசினர் வைத்தியசாலைகளுக்கு தேவையான அம்புலன்ஸ் வண்டிகளும் நடமாடும் பற்சிகிச்சை கூடங்கள் அமைந்துள்ள வாகனங்களும் இன்று வவுனியா மாவட்ட சுகாதார திணைக்கள அலுவலகத்தில் வைத்து  வழங்கப்பட்டன. வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர்இரவீந்திரன்  உள்ளிட்ட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு வைத்தியசாலைகளுக்கு  அம்புலன்ஸ் வண்டிகளும் யாழ்ப்பாணத்திற்கும், முல்லைத்தீவுக்கும் நடமாடும் பற்சிகிச்சை வாகனங்களும் கையளிக்கப்பட்டன. இந்நிலையில் அம்மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி சுகாதார பணிப்பாளர்கள் மேற்படி வாகனங்களைப் பொறுப்பேற்றனர்.

வழங்கப்பட்ட இந்த வாகனங்களின் மொத்த பெறுமதி ஒரு கோடியே 52 இலட்சம் ரூபா என மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். வட மாகாணத்தில் சுகாதார வேலைத்திட்டங்கள் நல்லமுறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைக்கு தேவையான அனைத்து பொருட்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் தென் பிராந்தியத்தில் உள்ள வைத்தியசாலைகளில் வ்வாறான வசதிகள் உள்ளனவோ அதே வசதிகள் வடக்கில் உள்ள வைத்தியசாலைகளுக்கும் தேவை என்பதினை நாம் உணர்ந்துள்ளோம் என ஆளுநர் இந்த வைபவத்தில் பேசியபோது குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .