Suganthini Ratnam / 2010 நவம்பர் 10 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் பொதுசுகாதார பரிசோதகர்கள், தலைமன்னார் தொடக்கம் முருங்கன் வரையிலான பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவங்களுக்கு சென்று திடீர் பரிசோதனை மேற்கொண்டபோது, காலாவதியான மென்குளிர்பாணம் மற்றும் உணவுப் பண்டங்களை விற்பனை செய்துவந்த 3 வர்த்தக நிலையங்கள் மீது இன்று சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாறு காலாவதியான மென்குளிர்பானம் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்துவந்த 3 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி கெ.ஜீவராணி முன்னிலையில் ஆஐர்படுத்தப்பட்டதுடன், மீட்கப்பட்ட பொருட்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட நீதிபதி, வர்த்தக நிலையங்களில் மீட்கப்பட்ட காலாவதியான பொருட்களுக்கமைவாக ஒவ்வொருவருக்கும் தலா 8000 ரூபாய், 10,000 ரூபாய், 12,000 ரூபாய் என அபராதம் விதித்தார்.
அத்துடன், காலாவதியான பொருட்களை அழித்துவிடுமாறும் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி கெ.ஐPவரானி உத்தரவிட்டார்.
23 minute ago
28 minute ago
45 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
45 minute ago
51 minute ago