Super User / 2010 நவம்பர் 12 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த)
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் மக்களின் காணி பிரச்சினைகள் குறித்து இன்றும் நாளையும் ஆராயப்படுகின்றது.
இது தொடர்பான கூட்டம் இன்று ஆரம்பமாகி நாளையும் தொடர்ந்து நடைபெறுகி்றது. இன்றைய கூட்டம் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெற்றது.
நாளைய கூட்டம் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
நாளைய கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
காணிக்கான உறுதிப் பத்திரங்களை இழந்தோர், உறுதிப் பத்திரம் வழங்கப்படாத காணிகளுக்கான பத்திரம் வழங்கல் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளை ஆராயப்படவுள்ளன.
5 hours ago
7 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
15 Nov 2025