2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் நிலையத்தில் தீப்பிடிப்பு

Kogilavani   / 2010 நவம்பர் 13 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா முதலாம் குறுக்தெருவில், மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் நிலையமொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற மின்சார ஒழுக்கு காரணமாக 23 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

இங்கு திருத்துவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து மோட்டார் சைக்கிள்களும் எரிந்து தீக்கிரையாகியுள்ளன.

அதிகாலைவேளையில்,  நிலையத்தில் புகைக்கசிவையும்,  பிளாஸ்திக் எரியும் மணம் வருவதையும் அவதானித்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் தண்ணீர் பவுசருடன் வந்து தீயணைப்பில் ஈடுபட்டபோதிலும் அனைத்து மோட்டார்களும் ஏற்கெனவே எரிந்து தீக்கிரையாகிவிட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--