2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் வாகனம் மீதான தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூவர் விடுதலை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 15 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசர)

வவுனியா மில் வீதியில் தரித்துநின்ற சொகுசு வாகனம் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவரும் இன்;று திங்கட்கிழமை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட பதில் நீதிவான் ஏ-வி-அருணகிரிநாதன் முன்னிலையில் வழக்கு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த சம்பவத்திற்கும் சந்தேக நபர்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை என பொலிஸாரின் அறிக்கையினை அடுத்து மூவரும் விடுதலை செய்யப்பட்டனர் என மாவட்ட நீதிமன்ற பதிவாளர் தெரிவித்தார்.

ஏற்கனவே, ஆறு சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

வாகனம் மீதான தாக்குதல் கடந்த மாதம் 18ஆம் திகதி இரவு நடைபெற்றிருந்தது. இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்திருந்தனர். வாகனம் பலத்த சேதத்திற்குள்ளானது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .