2020 நவம்பர் 28, சனிக்கிழமை

கிளிநொச்சியில் போர் அடையாளங்கள் பேணும் நடவடிக்கை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 15 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

யுத்தத்தின்போது சிதைவடைந்த கட்டிடங்களையும் நீர்த்தாங்கி மற்றும் யுத்த தளபாடங்களையும் பேணும் நடவடிக்கை கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின்போது கிளிநொச்சி நகரிலிருந்த பிரதான தண்ணீர்த்தாங்கி வீழ்த்தப்பட்டிருந்தது. இந்தப் பிரமாண்டமான நீர்த்தாங்கியை தென்பகுதியிலிருந்து வடக்கே சுற்றுலாப் பயணிகளாக வரும் சிங்கள மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வந்தனர். இதனையடுத்து இந்த நீர்த்தாங்கி அமைந்திருக்கும் வளாகப் பகுதியை பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கமைவாக இந்த வளாகப் பகுதியைச் சுற்றிப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  இதனை மக்கள் பார்வையிடுவதற்கான முறையில் இந்தத் தண்ணீர்த்தாங்கிப் பிரதேசம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, ஆனையிறவிலும் ஒரு யுத்த நினைவுச் சின்னம் இவ்வாறு பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 1990ஆம் ஆண்டு ஆனையிறவு படைத்தளத்தைத் தாக்கும் முயற்சியின்போது  விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட டாங்கி ஒன்று படைச் சிப்பாய் ஒருவரின் தற்கொலைத் தாக்குதலால் சிதைந்த நிலையில் மிஞ்சியது.

இந்தப் போர் டாங்கியைச் சுற்றி பாதுகாப்பான ஏற்பாடுகளைச் செய்து மக்கள் பார்வையிடுவதற்கக்ன   வசதிகள்  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--