2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

இடம்பெயர்ந்த விவசாயிகளுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உதவி பொருட்கள் கையளிப்பு

Kogilavani   / 2010 நவம்பர் 16 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹேமந்த்)

வன்னியில் போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களினூடாக சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேறிய விவசாயிகளுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் நேற்று மாலை உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சங்கானை பிரதேச செயலாளர்தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் கலந்துக் கொண்டு உதவிப் பொருட்களை வழங்கிவைத்தார்.

மீளக்குடியேறிய 65 விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களும் 53 பேருக்கு கடற்றொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

போரூட் நிறுவனம்  இவ் உதவி பொருட்களை  அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--