2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட நபருக்கு சிறைத்தண்டனை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 17 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

மன்னாரிலிருந்து, கொழும்பிற்கு ஹெரோயின் போதைப்பொருளை பஸ்சில் கடத்தி செல்ல முற்பட்ட நபர் நீதிமன்றில் குற்றவாளியாக காணப்பட்டு ஆயுள்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி சுமார் ஒரு கிலோ நிறைகொண்ட ஹெரோயினை எதிரி  உடமையுடன் வைத்திருந்தமை மற்றும் இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்றமை தண்டிக்கப்படவேண்டிய குற்றமாகும்.

மன்னார்,  மதவாச்சி வீதி பறையன்  ஆலங்குளம் சோதனை நிலையத்தில் பஸ்சில் பயணம் செய்தபோது குற்றவாளியான எதிரி  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணை  முடிவு வவுனியா மேல் நீதிமன்றில் மேல்நீதிமன்ற நீதிபதி ஜெ-விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்று போதைப்பொருள்  கடத்தலில் ஈடுபட்ட மட்டகுழி தொட்டுப்பொல வீதியைச் சேர்ந்த செட்டியார் கந்தசாமி இரண்டு குற்றசாட்டிலும் குற்றவாளியாக காணப்பட்டு ஆயுள்காலச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .