2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

எருக்கலம்பிட்டியில் ஹஜ் பெருநாள் விழா

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 17 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எஸ்.முஸப்பிர்)

மன்னார், எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் ஐந்தாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹஜ் பெருநாள் விழா நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான நூர்தீன் மசூர் தலைமையில் நாளை ஆரம்பமாகும் இந்த ஹஜ் பெருநாள் விழாவானது,  தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுமென ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த ஹஜ் பெருநாள் விழாவின் முதல் நாளான நாளையதினம் அப்பிரதேசத்தைச் சேர்ந்த கால்பந்தாட்ட அணிகள் கலந்துகொள்ளவுள்ள மாபெரும் கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன.  இப்போட்டிகளில் சுமார் 12 விளையாட்டுக் கழகங்கள் கலந்துகொள்கின்றன. அதனைத் தொடர்ந்து மரதன் ஓட்டப் போட்டிகள், சைக்கிள்  ஓட்டப் போட்டிகள் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

அத்துடன் இஸ்லாமிய கலை, கலசார நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி நாளான சனிக்கிழமை நிகழ்வுகளுக்கு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். கெளரவ அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறப்பு அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நிக்கலஸ்பிள்ளையும் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர், யுத்தத்திற்கு பின்னர் நடைபெறவுள்ள இந்த ஹஜ் பெருநாள் விழா மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் எருக்கலம்பிட்டி மக்களுடன் சுமார் எட்டாயிரம் பேர் கலந்துகொள்வார்களென்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--