A.P.Mathan / 2010 நவம்பர் 18 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
	
(எஸ்.ஜெனி)
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவிவரும் பாடசாலை சிற்றூழியர்களுக்கான பதவி வெற்றிடத்தினை நிரப்புவதற்காக இன்று வியாழக்கிழமை மன்னார் வலையக்கல்விப் பணிமனையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வானது அநீதியான முறையில் இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உருப்பினர் அ.செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்:
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவி வரும் சிற்றூழியர்களுக்கான பதவி வெற்றிடத்தினை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதன்போது பலர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் இன்று வியாழன் நேர்முகத்தேர்வு நடத்துவதாக கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. எனினும் பலருக்கு நேர்முக தேர்வுக்கான கடிதங்கள் கிடைக்கவில்லை என என்னிடம் தெரிவித்திருந்தனர். இதேவேளை நேர்முக தேர்வின்போது சமூகமளித்தவர்களை விட அவர்கள் தயாரித்து வைத்திருந்த பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டமை, அரசியல் ரீதியாக பதவி வெற்றிடத்திற்கு ஆட்கள் சேர்ப்பதற்கான நடவடிக்கையாகவே கருதமுடிகிறது என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் குறித்த நியமனங்களை உடன் நிருத்தி அதனை பரிசீலினை செய்யுமாறி கோரி வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரஸ்ரீ மற்றும் பல அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உருப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
45 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
5 hours ago