2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

வவுனியாவில் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் சிரமம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

கடந்த சில தினங்களாக வவுனியாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்வான பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் குளங்களை அண்டிய பிரதேசங்களில் உள்ள குடியிருப்பாளர்களுடைய வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநேகமான குளங்கள் நிரம்பி வழிய தொடங்கியுள்ள நிலையில் ; குளங்களின் பாதுகாப்பு கருதி குளங்களின் வான்கதவுகளை திறந்துவிடும்படி நீர்பாசன திணைக்களம் கமநல அமைப்பினருக்கு பணிப்புரைகளை விடுத்துள்ளது.

அத்துடன் குளக்கட்டுகளை அவதானிக்குமாறு ஆலோசணை தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இளைஞர்கள் குளங்களில் நீராடுவதினை தவிர்க்குமாறும் வேண்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--