Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா, தாண்டிகுளம், பிரமண்டு வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நடமாடும் சேவையின் போது கொட்டும் மழையிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வவுனியா மாவட்ட அரச அதிபர், மேலதிக பதிவாளர் நாயகம், ஒய்வூதியத் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட சிரேஸ்ட உயர்அதிகாரிகள் பலரும் இந்த நடமாடும் சேவையின் போது பிரசன்னமாகி இருந்தார்கள்.
சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டதாக குறிப்பிட்ட அதிகாரிகள் போர், மற்றும் ஆழிப்பேரலை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், திருமண பதிவுசான்றிதழ் பிரதிகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் இங்கு செய்து கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .