2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் கருத்தரங்கு

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட மனித உரிமைகள் இல்லம் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு வவுனியா முத்தையா மண்டபத்தில் இணைப்பாளர் ந.கபில்நாத் தலைமையில் நடைபெறவுள்ளது.

மனித உரிமைகள் இல்லத்தின் சட்டபிரிவு இயக்குநர் வி.எஸ்.கணேசலிங்கம், பிரதேச செயலாளர் ஏ.சிவபாதசுந்தரம், சட்டத்தரணி கே.தயாபரன், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் எம்.சந்திரகுமார், இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், சிவஞானம் சிறிதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் வவுனியா நகரபிதா ஜி.நாதன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

தமிழ்மணி அகளங்கன் தலைமையில் 'ஜனநாயகம் மனித உரிமைகளை பேணுகிறது –பேணவில்லை' என்னும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--