Menaka Mookandi / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.ஜெனி)
அனைத்துலக மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் 12 மணிவரை மன்னார் புனித செபஸ்தியார் ஆலைய வளாகத்தில் சர்வமத பிரார்த்தனையொன்று நடத்தப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் குடும்ப உறவினர்களின் எற்பாட்டில் காணாமல் போனவர்கள், இறந்த உறவுகளை நினைவு கூறும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசப் ஆண்டகை, மன்னார் சர்வமதத் தலைவர்கள், கொழும்பில் இருந்து வந்துள்ள காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி திருமதி சந்தியா எக்னெலிகொட ஆகியோர் கலந்தகொண்டனர்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் சுமார் நூறு பேர் வரை கலந்தகொண்டனர். இதன்போது காணாமல் போனவர்களின் உறவினர்கள் காணாமல் போனவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு உருக்கமான பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வரைந்த ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

9 hours ago
9 hours ago
9 hours ago
27 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
27 Dec 2025