2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

பண்டிகைகளை முன்னிட்டு மன்னாரில் வியாபாரம் களைகட்டல்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 14 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

நத்தார், புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு மன்னாரில் தென்பகுதி வியாபரிகளின் வருகை அதிகரித்துள்ளதுடன்,  தற்காலிக நடைபாதை வியாபரங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  


மன்னாரில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக நீடித்த சீரற்ற  காலநிலை தற்போது வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில், மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மன்னாரிற்கு வந்துள்ள பெருமளவான தென்பகுதி வியாபாரிகள் மன்னார் பஸார் பகுதியில் வீதியோரக்கடைகளை அமைத்து வியாபாரத்தினை மேற்கொள்கின்றனர்.


யுத்தம் முடிவடைந்ததையடுத்து, தென்பகுதி வியாபாரிகளின் வருகை அதிகளவிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--