2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

தேசிய வீட்மைப்பு அபிவிருத்தி அதிகார சபை கிளிநொச்சி மாவட்ட அலுவலகம் இன்று திறப்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய இயந்திர உபகரண அலகின் உதவியுடன் மீள்நிர்மாணம் செய்யப்பட்ட தேசிய வீட்மைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயம் இன்று வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

அமைச்சர் விமல் வீரவன்ச, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார், மாவட்ட அரச அதிபர் திருமதி ஆர்.கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய கிளிநொச்சி மக்களுடைய நலன்கருதி ஆறு மில்லியன் ரூபாய் செலவில் இந்த காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது இதேபோன்றதொரு மாவட்ட அலுவலகம் விரைவில் முல்லைத்தீவிலும் திறக்கப்படும் என இந்த வைபவத்தில் உரையாற்றிய அமைச்சர் வீரவன்ச குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--