Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
பருவமழையினையடுத்து வவுனியா நகரிலும் சுற்றுப்புறங்களிலும் நுளம்புகளினால் பரவக்கூடிய நோய்களை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
மாலை நேரங்களில் சில இடங்களில் இரசாயன மருந்து கலந்த புகையூட்டல் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு;ள்ளது எனவும் அவர் கூறினார்.
டெங்கு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியா நகருக்கு வெளி மாவட்டத்திலிருந்து வருபவர்களுடைய தொகை அதிகளவு காணப்படுவதினால் தொற்று நோய்கள் பரவ நிறைய வாய்ப்புக்கள் உள்ளதினால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருமலுடன் காய்ச்சல் காணப்படின் உடனடியாக வைத்தியரை அனுகி ஆலோசணை பெற வேண்டும் எனவும் டாக்டர் சத்தியலிங்கம் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago