2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

போயா தினத்தில் மன்னாரில் மாடு அறுத்தவர்கள் விளக்கமறியலில்

Super User   / 2011 ஜனவரி 20 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

போயா தினமான நேற்று புதன் கிழமை விற்பனைக்காக மாடுகளை அறுத்த 5 நபர்களை நேற்று புதன்கிழமை மன்னார் முருங்கன் பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

5 நபர்களையும் முருங்கன் பொலிஸார் இன்று வியாழன் மன்னார்   நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த நிலையில் விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் திருமதி கே.ஜீவராணி, சந்தேக நபர்களில் இருவரை சரீரப் பினையில் விடுதலை செய்ததோடு ஏனைய 3 சந்தேக நபர்களையும் நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட மாட்டு இறைச்சிகள் நீதவானின் உத்தரவுக்கமைவாக இன்று வியாழக்கிழமை அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .