2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா, எஸ்.ஜெனி)

 

மன்னார் - மதவாச்சி வீதியில் இசைமாலை தாழ்வு என்ற இடத்தில் இடம்பெற்;ற வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. தனியார் பஸ்ஸொன்றும்  மோட்டார் சைக்கிளும் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதாலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.

இசைமாலை தாழ்வைச் சேர்ந்த அன்ரன் செல்வநாயகம் (வயது 25), மரியதாஸ் மதன்ராஜ் (வயது 21) ஆகிய இளைஞர்களே இவ்விபத்தில் பலியானவர்கள் ஆவர்.

மரண விசாரணையின் பொருட்டு சடலங்கள் மன்னார் அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .